![]() |
| ஸ்ரீ. சுந்தர.ஜோதி (தோற்றம்: 1955 மார்ச் 10 - மறைவு: 2023 டிச. 10) |
சங்கத்தின் வேலூர் கோட்ட அமைப்பாளர், ராமநாதபுரம் கோட்ட அமைப்பாளர், ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியர், சென்னையிலுள்ள ஆர்.எஸ்.எஸ். மாநில தலைமை அலுவலகத்தின் துணை நிர்வாகி எனப் பல பொறுப்புகளை வகித்துள்ள இவர், கடந்த 2023, டிசம்பர் 10ஆம் தேதி, சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு, அகால மரணம் அடைந்தார்.
அமரர் ஸ்ரீ. ம.வீரபாகு அவர்களை குருவாகவும் தனது வழிகாட்டியாகவும் ஏற்றவர் ஜோதிஜி. அவருடனான தனது மறக்க இயலாத அற்புதமான அனுபவங்களை ‘வாட்ஸாப்’ சமூக வலைத்தளத்தில் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகளே இங்கு இந்த வலைப்பூவில் தொகுக்கப்பட்டுள்ளன. உடல்நலக் குறைவு காரணமாக, இந்தத் தொடர் முற்றுப் பெறாமலே, ஸ்ரீ. ஜோதிஜியின் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது.
ஸ்ரீ. சுந்தர.ஜோதி ஜி: வாழ்க்கைச் சுருக்கம்
.1955 மார்ச் 10 : பிறப்பு
பெற்றோர் : சுந்தரம் – உண்ணாமலை அம்மாள்
படிப்பு : பி.யூ.சி. (1971)
1971 : தனியார் பஞ்சாலையில் பணி.
1975 : முதலாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்க (திருப்பராய்த்துறை)
1978 : மில் வேலையிலிருந்து விலகல்.
1978 : இரண்டாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்க (சேலம்)
1980 : மூன்றாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்க (நாகபுரி)
1978 : சங்க பிரசாரக் ஆனார் -
திருவண்ணாமலை நகர் பிரசாரக்
1980 : வேலூர் தாலுகா பிரசாரக்
1981 : வேலூர் ஜில்லா பிரசாரக்
1981 மார்ச் 16 : தடையை மீறி, வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை
1984 : திருவண்ணாமலை ஜில்லா பிரசாரக்
1987 : வேலூர் சஹ விபாக் பிரசாரக்
1989 : ராமேஸ்வரம் விபாக் பிரசாரக்
1995 : விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர்
2005 : விஜயபாரதம் மேலாளர்
2010 : சென்னை கார்யாலயத்தில் சஹ கார்யாலய பிரமுக்
2020 : மூத்த பிரசாரகராக வழிகாட்டல்.
2023 டிசம்பர் 10 : மறைவு (காலமாகும்போது வயது: 68)
