சுருக்கமான அறிமுகம்
தேசிய மறுமலர்ச்சி இயக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் நாகபுரியில், 1925ஆம் ஆண்டு விஜயதசமியன்று துவங்கப்பட்டது.
உலகின் குருவாக பாரதம் உயர வேண்டும் என்ற உன்னத இலக்குடன், தன்னலமற்ற இளைஞர் படையை உருவாக்கும் அற்புத செயல்முறையுடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று 97 ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டை நோக்கி விரைகிறது. உலகிலேயே மிகப் பெரிய தன்னார்வ தொண்டு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தான். இதன் தற்போதைய தலைவர் ப.பூ. மோகன் பாகவத்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஊக்கம் பெற்று இயங்கும் சகோதர இயக்கங்கள் ‘சங்க பரிவார்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் சில: பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரீய சேவாபாரதி, வித்யா பாரதி, சம்ஸ்கிருத பாரதி, ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச், பாரதீய ஜனதா கட்சி, இந்து முன்னணி, வனவாசி கல்யாண் ஆசிரமம் உள்ளிட்டவை.
மேலும் விவரங்களுக்கு காண்க: Rashtriya Swayamsevak Sangh