| ஸ்ரீ. நெல்லை ம.வீரபாகு (தோற்றம்: 1949 ஜன. 14 - மறைவு: 1920 செப். 13) |
சுருக்கமான அறிமுகம்
திருநெல்வேலியில் 1949 ஜன. 14-இல் மகாதேவன் என்பாரது மைந்தனாகப் பிறந்தவர் ஸ்ரீ. நெல்லை. ம.வீரபாகு. இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழியராக தனது வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர்.
தமிழகத்தின் பல பகுதிகளில், சங்கத்தின் பல நிலைகளில் பணிபுரிந்த ம.வீரபாகு, வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவர் இல்லாமல் இருந்த குறையைப் போக்கியவர். அதற்காக அவர் நடத்திய சமர், தமிழக வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக மக்கள் இயக்கம் துவங்கியதோடு, தேசத்திலேயே முதல் கரசேவையாக, மக்கள் எழுச்சியின் உதவியுடன் கோயிலில் ஜலகண்டேஸ்வரரை 1981-இல் ஸ்தாபித்தார் ம.வீரபாகு.
பின்னாளில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளில் மாநில அமைப்பாளராகச் செயல்பட்டார். கடைசி பத்தாண்டுகளில் ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
சுமார் 52 ஆண்டுகள் இயக்க வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்; மிகச் சிறந்த பேச்சாளர்; அனைவரையும் இணைக்கும் அற்புதமான இயக்க அமைப்பாளர். 2020 செப். 13இல் கரோனா பெருந்தொற்று காரணமாக காலமானார்.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ள வரை, தமிழக மக்களின் மனங்களில் அவர் வாழ்வார்.